×

சித்தூர் கலெக்டர், பலமனேர் ஆர்டிஓ ஆபிசில் மனுநீதிநாள் முகாம் 476 கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

சித்தூர் : சித்தூர் கலெக்டர், பலமனேர் ஆர்டிஓ அலுவலகத்தில் மனுநீதிநாள் முகாமில் பெறப்பட்ட 476 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இணை கலெக்டர் வித்யாதாரி தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, நில ஆக்கிரமிப்பு செய்துவர் மீது நடவடிக்கை, முதியோர் உதவித்தொகை, சுடுகாடுக்கு பாதை, ரேஷன் கார்டு வேண்டி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், சுகாதார வசதி ஏற்படுத்தி தரவேண்டும், கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 276 மனுக்களை வழங்கினர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட இணை கலெக்டர், ஓரிரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதேபோல் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

இந்த மனுநீதினால் முகாமில் டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிசத் முதன்மைச்செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் பலமனேர் ஆர்டிஓ அலுவலகத்தில் கலெக்டர் சுமித் குமார் தலைமையில் மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது.

இதில் 220 பேர் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களுக்கு உறுதி அளித்தார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் பலமநேர் எம்எல்ஏ அமர்நாத் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post சித்தூர் கலெக்டர், பலமனேர் ஆர்டிஓ ஆபிசில் மனுநீதிநாள் முகாம் 476 கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chittoor Collector ,Palamaner RTO Office ,Petition Day Camp ,Chittoor ,Petition ,Day ,Chittoor Collector’s Office ,Joint Collector ,Vidyadhari… ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேசத்தை விட பொருளாதார...