முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிக்கு வரும் பாமணியாறு இப்பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாகவும், பாசணத்தை பெற்றுதரும் ஒரு முக்கிய ஆறாகவும் உள்ளது.
மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், மன்னார்குடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்தை தந்து பின்னர் கடைமடைபகுதியாக உள்ள முத்துப்பேட்டை பகுதிக்கு வந்து இதிலிருந்து தண்ணீர், பல பகுதியில் கிளைகளாக பிரிந்து அப்பகுதி விவசாயிகளுக்கு பாசன ஆதாரமாக உள்ளது.
இறுதியில் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியில் உள்ள கடலில் சென்று அடைகிறது. இறுதியாக கடலில் சென்று அடையும் நீரை சேமிக்கும் வகையில் அமகை்கப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை அருகில் மேற்கில் உள்ள தம்பிக்கோட்டை கிழக்கில் உள்ள பேட்டை, செம்படவன்காடு ஆகியவை இடையில் உள்ள தொப்பதானவெளி பாமணி ஆற்றில் தடுப்பனை அமைந்துள்ளது சமநிலைபொறி என அழைக்கப்படும் இந்த தடுப்பணை தஞ்சாவூர் நீர்வளத்துறை வெண்ணாறு வடிநிலை மன்னார்குடி உபகோட்டம் பராமரிப்பில் உள்ளது.
இந்ததடுப்பனை தண்ணீர் தேக்கம் மூலம் தம்பிக்கோட்டை, மங்கலூர் கீழநம்மங்குறிச்சி போன்ற சுற்று பகுதி விவசாயத்திற்கும், அதேபோல் தடுப்பனை அருகே பிரிந்து செல்லும் பாசன வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கும் மற்றும் அப்பகுதி பல்வேறு வகையில் நீர் ஆதாரத்தையும் பெற்று தருகிறது.
26 கதவணைகளுடன் 1942-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இந்த தடுப்பனை முறையாக பராமரிக்கபடாததால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதில் 26 கதவுகளும் சேதமாகியுள்ளன குறிப்பாக சேதமாகியுள்ள ஒரு சில கதவுகள் எந்தநேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. சில கதவைகள் விலாமல் இருக்க கம்புகள் கொண்டு முட்டுகொடுத்து வைக்கப்படுள்ளது.
அதேபோல் தடுப்பனை கதவுகளை திறக்க செல்லும் மேல் பகுதியில் நடைபாதையில் சிலாப் பொழிவு இழந்து சேதமாகி பல பகுதி உடைந்து விழுந்து உள்ளது. 2009ம் ஆண்டு ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின்போதும் அதன் பிறகு கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்பில் தடுப்பனையில் பல்வேறு பகுதி சேதமாகியுள்ளது. தடுப்பணையை பார்க்கத்தான் வண்ணம்பூசினாலும், ஆனால் மிகவும் பொலிவு இழந்து காணப்படுகிறது.
அதேபோல் தடுப்பனையின் மேல்பகுதி நடைபாதையில் அன்று முதல் இன்று வரை ஒரு புறம் தம்பிக்கோட்டை, மலேயா கணபதி நகர் பகுதியிலிருந்தும், அதேபோல் மறுபுறம் பேட்டை செம்படவன்காடு பகுதியிலிருந்தும் மக்கள் குறுக்கே செல்வதற்காக நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமீபகாலமாக சேதமாகியுள்ள இந்த நடைபாதையால் இதில் பயணம் செய்யும் மக்களுக்கு ஆற்றுக்குள் விழுந்து உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்கள் உள்ளன.
பழுதடைந்த இந்த தடுப்பணையை முழுமையாக சீரமைக்க வில்லை இதனால் இந்த தடுப்பணை திருகு, ஹெட், ஷட்டர் ராடு இணைப்பிலிருந்த சிமெண்ட் இணைப்பு நடைபதை சிலாப் கைபிடி சுவர் ஆகியவை எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள்ளது.
இதனால் தான் கான்கிரீட்டும் இணைப்புகளும் உதிர்ந்து நிற்கிறது. இதனால் ஷட்டர் ராடை சுழற்றி இயக்க வழியில்லை என்பதோடு ஷட்டரை மேலே ஏற்றி இறக்கவும் முடியாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
அதிகளவு நீர் வந்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் நடப்பாண்டு பாசன நீரை தேக்கி வைத்து தேவைக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியினர் இனியும் காலதாமதம் படுத்தாமல் போர்க்கால அடிப்படையில் இந்த தடுப்பணையை முழுமையாக சீரமைத்து தர முன்வரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேமிப்பதில் சிக்கல்…
திருவாரூர் மாவட்டத்தில் கடைசி கடைமடை பகுதியான முத்துப்பேட்டை பகுதி காவிரிநீரை நம்பியே சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தஞ்சை மாவட்ட எல்லையிலிருந்து திருவாரூர் மாவட்டம் தொடங்கி மன்னார்குடி திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீரே பாசன ஆதாரமாக உள்ளது.
சில பகுதிகளில் போர்வெல் பாசன உதவியுடன் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தும் முத்துப்பேட்டை உட்பட பெரும்பாலான பகுதி நிலங்கள் ஆற்றுநீர் வரத்தை நம்பியுள்ளன.
கடந்தாண்டு நீர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளான விவசாயிகள் ஆற்றுநீரை நடப்பாண்டு தேவைக்கேற்ப தேக்கிவைத்து நடப்பு பருவத்துக்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசின் சிறப்பு நிதியில் நிதி ஒதுக்கீடு செய்து இந்த சட்ரசை சீரமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post முத்துப்பேட்டையில் பாமணி ஆற்றில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.
