×

சிவகங்கை அருகே டேங்கர் லாரிகள், பேருந்து மோதல்..!!

சிவகங்கை: சிவகங்கை அருகே மண்ணெண்ணெய் ஏற்றி வந்த லாரி, எரிவாயு டேங்கர் லாரி, பேருந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. சிவகங்கை மதுரை சாலையில் செம்பூர் காலனி பகுதியில் 3 வாகனங்களும் மோதிக் கொண்டன. விபத்து காரணமாக சிவகங்கை மதுரை சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்ணெண்ணெய், எரிவாயு டேங்கர் லாரிகள் விபத்தால், தீ ஏற்படாத வண்ணம் தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர், 10 பயணிகள் காயம் அடைந்த நிலையில், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சிவகங்கை அருகே டேங்கர் லாரிகள், பேருந்து மோதல்..!! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Chembur Colony ,Sivaganga-Madurai road ,Sivaganga-Madurai ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு