×

16 வயது சிறுமி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது

திருவாரூர், ஏப். 22: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் சிறுமி கர்ப்பமாத்திய வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா குலக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ராவணன் மகன் சந்தோஷ் (20).கூலி தொழிலாளியான இவர் நன்னிலம் லயன் கரை தெருவில் வசித்து வரும் 16 வயது சிறுமி ஒருவர் நன்னிலம் கடை தெருவில் இயங்கி வரும் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக மேற்படி இளைஞர் ஆசை வார்த்தை கூறி கடந்த பிப்ரவரி மாதம் 9ந் தேதி அவரது பாட்டி வீட்டில் இருந்தபோது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்து சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில்சிறுமி அடிக்க புகார் என்பதில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் சந்தோஷை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 16 வயது சிறுமி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Nannilam, Tiruvarur district ,Santosh ,Ravana ,Kulakudi village ,Nannilam taluka, Tiruvarur district ,
× RELATED ஓய்வூதியர் தின விழா