×

கிளாமர் காளி கொலை வழக்கில் வெள்ளை காளி கோர்ட்டில் ஆஜர்

திருமங்கலம், ஏப். 22: கிளாமர் காளி கொலை தொடர்பாக சென்னை புழல் சிறையில் இருந்த வெள்ளை காளி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமங்கலம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.மதுரை, மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கிளாமர் காளி (எ) காளீஸ்வரன் (32). மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டலத்தலைவர் வி.கே.குருசாமியின் சகோதரி மகன். இவர் தனது 2வது மனைவி மீனாட்சியுடன் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரில் வசித்து வந்தார். கடந்த மார்ச் 22ம் தேதி இரவு கடைக்கு சென்றவரை, மர்மக்கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றது.

ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பழிக்குப்பழியாக வெள்ளை காளியின் கூட்டாளிகள் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கீரைத்துறையை சேர்ந்த வெள்ளை காளியின் தாய் ஜெயக்கொடி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய வெள்ளை காளி பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிளாமர் காளி கொலையில் மூளையாக செயல்பட்டதாக இவரும் கைது செய்யப்பட்டார். வெள்ளை காளியை திருமங்கலம் கோர்டில் ஆஜர்படுத்த சென்னை போலீசார் தனி வாகனத்தில் அழைத்து வந்தனர்.

திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை நேற்று காலை திருமங்கலம் மாஜிஸ்திரேட் ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் செல்வம், நாளை வெள்ளை காளியை ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனால் மீண்டும் அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். வெள்ளை காளி திருமங்கலம் கோர்ட்டில் ஆஜரானதை தொடர்ந்து ஏஎஸ்பி அன்சுல் நாகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

The post கிளாமர் காளி கொலை வழக்கில் வெள்ளை காளி கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : White Kali ,Glamour ,Thirumangalam ,Chennai ,Puzhal ,Glamour Kali ,Thirumangalam court ,Banana Grove ,Madurai, ,Upper Anupanadi Housing Board… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை