×

வாணாபுரம் அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

ரிஷிவந்தியம், ஏப். 22: கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அத்தியூர் பகுதியில் கஞ்சா விற்பதாக பகண்டை கூட்டு சாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அத்தியூர் சந்தைமேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் பைக்கில் வந்த நபர்களை பிடித்து சோதனை நடத்தினர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர், மேலும், விசாரணையில் அரியலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் மகன் வேல்முருகன் (23), ராமசாமி மகன் ஆகாஷ் (19), அத்தியூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், சங்கராபுரம் வட்டம் நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவீன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பகண்டை கூட்டு சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேட்டு மற்றும் போலீசார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

The post வாணாபுரம் அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vanapuram ,Rishivanthiyam ,Bagandi Kottu Salai ,Athiyur ,Bagandi Kottu Salai police station ,Kallakurichi district ,Athiyur Market Market ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை