- சித்திராய்
- திருவோணம் நடராஜர்
- கட்டரிமங்கலம் கோயில்
- சதங்குளம்
- சித்திரை திருவோணம் நடராஜர்
- கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவில்
- கோவில்பட்டி சிவசக்தி திருவாசக மன்றம்...
- சித்திரை திருவோணம் நடராஜர் அபிஷேகம்
சாத்தான்குளம், ஏப். 22: சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோயிலில் சித்திரை திருவோணம் நடராஜர் அபிஷேகம், சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணி முதல் கோவில்பட்டி சிவசக்தி திருவாசக மன்றத்தினர் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. காலை 10.30 மணி முதல் அபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் நடராஜபிள்ளை தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
The post கட்டாரிமங்கலம் கோயிலில் சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம் appeared first on Dinakaran.
