×

மின்னல் தாக்கி மாணவி சாவு

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் கருப்பசாமி மகள் முத்து கவுசல்யா(17). இவர், தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். நேற்று மதியம் 1.35 மணியளவில் குறளையம்பட்டி பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் முத்து கவுசல்யா, வீட்டின் அருகே காய வைத்திருந்த மிளகாய்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் முத்து கவுசல்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

The post மின்னல் தாக்கி மாணவி சாவு appeared first on Dinakaran.

Tags : Vilathikulam ,Muthu Kausalya ,Karuppasamy ,Kuralaiyampatti East Street ,Dinakaran ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...