×

திருடன் பட்டம் வாலிபர் தற்கொலை

ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பழைய சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் லக்ஷ்மணன் மகன் யோகேஷ் (19). இவர் மீது கடந்த 13ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த பரமசிவன் மனைவி செல்வி என்பவர் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகைகளை திருடி விட்டதாக சந்தேகப்பட்டு பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தில் செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து யோகேசை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் யோகேஷுக்கு தொடர்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து யோகேஷை போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் திருட்டு பழி சுமத்தியதால் மன வருத்தத்தில் இருந்த யோகேஷ் கடந்த 18ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகை திருடியதாக வீண் பழி சுமத்தியதால், வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருடன் பட்டம் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Lakshmanan ,Yogesh ,Old Siruvangur ,Bagandai Kottu Salai police station ,Kallakurichi district ,Selvi ,Paramasivan ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...