- ஆர்எம்கே கல்லூரி
- பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டமளிப்பு விழா
- சென்னை
- ஆர்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- புதுவயல்
- பொன்னேரி
- திருவள்ளூர் மாவட்டம்
- ஆர்.எஸ். முனிரத்னம்
- RMK கல்வி குழுக்கள்
- ஆர்.ஜோதி…
- ஆர்.எம்.கே கல்லூரி
- பொறியியல் மற்றும்
- தொழில்நுட்பம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புதுவாயல் பகுதியில் உள்ள ஆர்எம்கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12வது மற்றும் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆர்எம்கே கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் யலமஞ்சி பிரதீப், துணைத் தலைவர் துர்காதேவி பிரதீப், நிர்வாக அறங்காவலர் சௌமியா கிஷோர், ஆலோசகர்கள் பழனிச்சாமி, பிச்சாண்டி, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார், டீன் ராமர் ஆகியோர் வரவேற்றனர்.
இதில், கல்லூரி நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பேசும்போது, வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் சிறப்பை நோக்கி முன்னேற வேண்டும். ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் மிக முக்கியம். மாணவர்கள் சமூகத்தில் அறிவு மற்றும் நேர்மையின் சிகரமாக திகழ வேண்டும். மாணவர்கள் திறமையான வல்லுநர்களாக உருவாக, பேராசிரியர்கள் மற்றும் மேலாண்மையின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றார்.
விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவாஸ்தவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2023 மற்றும் 2024ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 797 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 54 பேருக்கு ரூ.6.75 லட்சம் பரிசுத் தொகையையும், தங்க பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தி பேசினார். முடிவில் கல்லூரி புல முதல்வர் கே.சிவராம் நன்றி கூறினார்.
The post ஆர்எம்கே பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா: சிறந்த மாணவர்களுக்கு ரூ.6.75 லட்சம் பரிசுத்தொகை appeared first on Dinakaran.
