×

வெள்ளியங்கிரி 7வது மலையில் வழுக்கி விழுந்து வாலிபர் சாவு


தொண்டாமுத்தூர்: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி 7வது மலையில், 6350 அடி உயரத்தில் உள்ள குகையில் சிவபெருமான் கோயில் உள்ளது. இங்கு, தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி சமீர் வியாஸ் நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பெரியசாமி மகன் புவனேஷ் (18), பள்ளி நண்பர் 2 பேருடன் நேற்று முன்தினம் இரவு வந்தார். 7வது மலையில் லிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு இறங்கும்போது ஒரு பாறையில் நடந்தபோது புவனேஷ் கால் வழுக்கி பள்ளத்தில் விழுந்தார்.

தகவலறிந்து கோயில் நிர்வாகிகள் டோலியுடன் வந்து படுகாயத்துடன் கிடந்த புவனேசை மீட்டு மலை அடிவாரத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

The post வெள்ளியங்கிரி 7வது மலையில் வழுக்கி விழுந்து வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Velliangiri 7th hill ,Thondamuthur ,Poondi ,Western Ghats ,Coimbatore ,Periyasamy ,Sameer Vyas Nagar ,Mappillaiurani ,Thoothukudi district… ,Dinakaran ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...