×

விக்கெட் வீழ்த்துவதில் கிங் பஞ்சாப்பின் அர்ஷ்தீப் சிங்


பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்ததற்கு பஞ்சாப் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசியதே காரணம். குறிப்பாக பஞ்சாப்பின் அர்ஷ்தீப் சிங் 23 ரன் தந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய துாணாக திகழ்ந்தார். இந்த விக்கெட்டுகள் மூலம், பஞ்சாப் அணிக்காக அர்ஷ்தீப் வீழ்த்திய விக்கெட் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்து.

இதனால், அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகளை அள்ளிய வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில், பியுஷ் சாவ்லா (84 விக்கெட்), சந்தீப் சர்மா (73 விக்கெட்), அக்சர் படேல் (61 விக்கெட்), முகம்மது ஷமி (8 விக்கெட்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

The post விக்கெட் வீழ்த்துவதில் கிங் பஞ்சாப்பின் அர்ஷ்தீப் சிங் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Arshdeep Singh ,Bengaluru ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை அயர்லாந்து அணி அறிவிப்பு