×

மே 1ம் தேதி முதல் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணம் வசூல் இல்லை: ஒன்றிய அரசு நெடுஞ்சாலை துறை தகவல்

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் மே ஒன்றாம் தேதி முதல் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணம் வசூல் செய்யப்படாது என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பாஸ்ட் டேக் கட்டண முறைக்கு மாறாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் செய்யப்படும் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மே ஒன்றாம் தேதி முதல் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூலை செயல்படுத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மே 1ம் தேதி முதல் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணம் வசூல் இல்லை: ஒன்றிய அரசு நெடுஞ்சாலை துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government Highways Department Information ,New Delhi ,Union Ministry of Road Transport and Highways ,Dinakaran ,
× RELATED அகமதாபாத்தில் மோடியுடன் ஜெர்மனி பிரதமர் சந்திப்பு..!!