×

தனுஷ்கோடி அருகே ராமர் பாலமாக கருதப்படும் பகுதியில் சுற்றுலா படகு சேவையை தொடங்கவுள்ளது இலங்கை!!

கொழும்பு : ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே ராமர் பாலமாக கருதப்படும் பகுதியில் சுற்றுலா படகு சேவையை இலங்கை அரசு தொடங்கவுள்ளது. தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிகள் படகு சேவை தொடங்கப்படும் என்று இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க அறிவித்துள்ளார். 30க்கும் மேற்பட்ட மணல் திட்டுகளில் சில பகுதிகளை இலங்கை அரசு சுற்றுலாவுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்காக சில மணல் திட்டுகளை தனியார் பயன்படுத்திக் கொள்ளவும் இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது.

The post தனுஷ்கோடி அருகே ராமர் பாலமாக கருதப்படும் பகுதியில் சுற்றுலா படகு சேவையை தொடங்கவுள்ளது இலங்கை!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ramar Bridge ,Dhanushkodi ,Colombo ,Government of Sri Lanka ,Rameshwaram Dhanushkodi ,President ,Anura Kumara Dissanayake ,Dhamannar ,Rameshwaram ,
× RELATED தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய...