×

கட்டிட விபத்துகள் ஏற்பட்டால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு வீரர்கள் தத்ரூப ஒத்திகை

புதுக்கோட்டை, ஏப். 18: கட்டிட விபத்துகள் ஏற்பட்டால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காட்டினர். பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவர்களின் நினைவை போற்றும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் தீ தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டும் கடந்த 14ம் தேதி தீயணைப்பு அலுவலகங்களில் நீத்தார் நினைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தீ தொண்டு வார விழாவின் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தீயணைப்பு துறையினரின் போலி ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது.

இதில் திடீரென ஏற்படும் தீ விபத்து சம்பவங்களிலிருந்து தொழிலாளர்கள் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது, கட்டிட விபத்துகள் ஏற்பட்டால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி, அதேபோல் நீர்நிலைகளில் மூழ்கியவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீயணைப்புத் துறையினரால் தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது. இதில் பணியாளர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சிகளை மேற்கொண்டது காண்போரை வியக்க வைத்தது. இதன் பின்பு பணியாளர்களுக்கு தீ தடுப்பு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post கட்டிட விபத்துகள் ஏற்பட்டால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு வீரர்கள் தத்ரூப ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி