×

மயிலாடுதுறை கல்வியியல் கல்லூரியில் தீத்தொண்டு வார விழா

மயிலாடுதுறை, ஏப். 18: மயிலாடுதுறை, மல்லியம், பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் தீ தொண்டு வார விழா நடைபெற்றது. இதில் கல்லூரி துணை முதல்வர் குமார் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவின் சிறப்புவிருந்தினராக மயிலாடுதுறை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டு இயற்கையினால் ஏற்படும் ஆபத்துக்களையும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகளையும் இது தொடர்பாக அரசின் இலவச சேவை பெற 100, 101, 104, 108, 112, சேவைகள் குறித்தும் பல தகவல்களை தெரிவித்தார். மேலும் தீயணைப்பு முறை பற்றிய செயல் விளக்கத்தினையும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் , பேராசிரியர் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறை கல்வியியல் கல்லூரியில் தீத்தொண்டு வார விழா appeared first on Dinakaran.

Tags : Firefighters' Week ,Mayiladuthurai College of Education ,Mayiladuthurai ,Best College of Education ,Malliyam, ,Deputy Principal ,Kumar ,Fire Department Station Officer ,Ramesh ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா