×

குரூப்4 தேர்வில் வெற்றிபெற்ற 70 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநியமன ஆணை

திருவாரூர், ஏப்.17: திருவாரூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று கிராம நிர்வாக அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 70 பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்று திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்வில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பணிநியமன ஆணையை மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது: பணிநியமன ஆணை பெற்ற அனைத்து பணியாளர்களும் 100 சதவீதம் உண்மையாகவும், நேர்மையாகவும் அரசு பணியினை மேற்கொள்ள வேண்டும்.

மக்களுக்கான சேவைகளை உடனுக்குடன் முனைப்புடன் வழங்குவதில், பணியில் உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 70 நபர்களில் மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்கு 46 நபர்களும், திருவாரூர் வருவாய் கோட்டத்திற்கு 24 நபர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் யோகேஸ்வரன் (மன்னார்குடி), சங்கர் (பொ) (திருவாரூர்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post குரூப்4 தேர்வில் வெற்றிபெற்ற 70 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநியமன ஆணை appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Collector ,Mohanachandran ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை