பொன்னமராவதி, ஏப். 17: பொன்னமராவதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில் ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, மூன்று தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,ஒரு தனியார் மழலையர் தொடக்கப்பள்ளி,இரண்டு நர்ஸ்சரி பள்ளிகள், ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரண்டு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, ஒரு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி என நிறைய பள்ளிகள் உள்ளது. ஆனால் அரசு ஆண்கள் பள்ளி இல்லை. எனவே பொன்னமராவதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பொன்னமராவதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.