×

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ராஜேந்திர பாலாஜி 2016 முதல் 2021 வரை பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. ரவீந்திரன் என்பவர் புகாரின்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,K.T. Rajendra Balaji ,Virudhunagar ,Virudhunagar District Crime Branch ,Rajendra Balaji ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50...