×

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்

விருதுநகர்: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி, விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (38). தன்னை மீறி செயல்பட்டதால் இவரை வரிச்சியூர் செல்வம் 2021ல் சென்னையில் சுட்டுக் கொன்று, சடலத்தை நெல்லை தாமிரபரணி ஆற்றில் வீசியதாக கூறப்பட்டது. இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து வரிச்சியூர் செல்வம் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த வழக்கு விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததையடுத்து, ஜாமீனில் உள்ள வரிச்சியூர் செல்வம் நேரில் ஆஜரானார்.

பின்னர் விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வெளியில் வந்த வரிச்சியூர் செல்வம், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘என் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் முடித்து விட்டு நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். என்னை சுட்டுப்பிடிக்க போலீஸ் உத்தரவிட்டு இருப்பதாக வரும் தகவல்கள் வதந்தி. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்’’ என்றார்.

The post பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Varichiyur Selvam ,Virudhunagar ,Senthilkumar ,Allampatti ,Chennai ,Nellai Thamirabarani river ,Virudhunagar… ,
× RELATED மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய பெருமை...