×

சாட்சி ஆஜராகாததால் ராகுல் மீதான அவதூறு வழக்கு ஏப்.28க்கு ஒத்தி வைப்பு

புதுடெல்லி: கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது பிரசாரம் செய்த ராகுல் காந்தி ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உத்தரபிரதேச பாஜ மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா ராகுல் காந்தி மீது சுல்தான்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர் தரப்பில் ஆஜராக வேண்டிய சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post சாட்சி ஆஜராகாததால் ராகுல் மீதான அவதூறு வழக்கு ஏப்.28க்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Rahul ,New Delhi ,Rahul Gandhi ,Karnataka ,2018 elections ,Union Minister ,Amit Shah ,Uttar Pradesh ,BJP ,Vijay Mishra ,Rahul Gandhi… ,
× RELATED சபரிமலை தங்கம் திருட்டு...