×

வேட்பு மனுவில் சொத்து தகவல் மறைப்பு; ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி


புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி ரவீந்திரநாத்குமார் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், கல்வித் தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை மறைத்து தவறான தகவல்களை தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கியதாகவும், எனவே இவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மிலானி என்பவர் தேனியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு காவல்துறை ஆகியோர் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post வேட்பு மனுவில் சொத்து தகவல் மறைப்பு; ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : O.P. Ravindranath ,Supreme Court ,New Delhi ,O.P. Ravindranath Kumar ,O. Panneerselvam ,Theni ,2019 Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில்...