×

5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை பீகார் வாலிபர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

ஹூப்ளி: கர்நாடகா மாநிலம ஹூப்ளி அடுத்த அசோக் நகர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்திச் சென்ற குற்றவாளி ஒருவன், அந்த சிறுமியை ஆள்நடமாட்டமில்லாத ஒரு கட்டிடத்தில் வீசி எறிந்துவிட்டு தலைமறைவானான். இந்தக் கொலையால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அசோக் நகர் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ரித்தேஷ் குமார் (35) என்பவனை போலீசார் கைது செய்தனர்.

சிசிடிவி காட்சிகளில் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், ரித்தேஷ் அந்த சிறுமியை கொன்றது உறுதி செய்யப்பட்டது. சாட்சியங்களை சேகரிப்பதற்காக ரித்தேஷை அவர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதனைத் தொடர்ந்து, பெண் காவல் துணை ஆய்வாளர் அன்னபூர்ணா என்பவர் ரித்தேஷை துப்பாக்கியால் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்.

The post 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை பீகார் வாலிபர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Bihar ,Hubli ,Ashok Nagar ,Hubli, Karnataka ,Ashok ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...