- உச்ச நீதிமன்றம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- புது தில்லி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- பொதுச்செயலர்
- டி. ராஜா
- ராம் சங்கர்
- உச்சம்
- தின மலர்
புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.ராஜா வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் ராம் சங்கர் மூலமாக இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், “பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி வக்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. ஒன்றிய அரசின் கூட்டு நாடாளுமன்றக் குழு மற்றும் பிற தரப்பினர் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாக கருத்தில் கொள்ளாமல் அரசு மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டம் வாரியத்தின் சுயாட்சியை கணிசமாக குறைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வக்பு சட்ட திருத்தம் உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. வழக்கு appeared first on Dinakaran.
