×

60 ஆண்டு கனவு நிறைவேறியது!: ஈரோடு அருகே கரடுமுரடான கத்திரிமலைக்கு தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்..பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கத்திரிமலைக்கு சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு வசிக்கும் சோழகர் இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள், 60 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்து வந்தனர். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்திடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்ததை அடுத்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் 8 கிலோ மீட்டர் மலைச்சாலை அமைக்கும் பணியினை அந்தியூர் திமுக எம்.எல்.ஏ. வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வருவாய், வனத்துறை, ஊரக வளர்ச்சி அதிகாரிகள், பழங்குடியின மக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். கத்திரிபட்டி கிராமத்தில் இருந்து கரடுமுரடான செங்குத்தான மலையில் பயணம் செய்த பழங்குடியின மக்கள், இனி தார் சாலையில் பயணிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் கத்திரிமலை பழங்குடியின மக்களின் வாழ்நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. …

The post 60 ஆண்டு கனவு நிறைவேறியது!: ஈரோடு அருகே கரடுமுரடான கத்திரிமலைக்கு தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்..பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Kathrimalai ,Erode ,Andhiur ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...