×

ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீடு குறைப்பு சவுதி அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீடு குறைப்பு குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சவுதி அரசுடன் பேசி விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு:

இந்தியாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலமாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு திடீரென குறைக்கப்பட்டிருப்பது பல்லாயிரக்கணக்கானோரை பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக சவுதி அரசுடன் பேசி, இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.

The post ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீடு குறைப்பு சவுதி அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Saudi government ,PM ,EU ,Chennai ,Prime Minister of Tamil Nadu ,K. Stalin ,Chief Minister of Tamil Nadu ,MLA ,K. Extla ,Stalin ,India ,EU State ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...