சென்னை: இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள செய்தி: காங்கிரஸ் பேரியக்கத்தின் எளிய தொண்டனாய், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாய், பாசிச வாதிகளை சமரசம் இன்றி எதிர்கொள்ளும் கொள்கைவாதியாய், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பணியாற்றி வருகிறார்.
அரசியலமைப்பை கொடுத்த அம்பேத்கரின் சீடனாய், அடக்குமுறைகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுக்கும் போராளியாய், பல லட்சம் தொண்டர்களின் பல நாள் கனவான காமராஜரின் ஆட்சியை அமைத்திட தமிழகம் முழுவதும் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பிறந்தநாள் காணும் செல்வப்பெருந்தகைக்கு, இளைஞர் காங்கிரஸ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post செல்வப்பெருந்தகை பிறந்தநாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வாழ்த்து appeared first on Dinakaran.
