- டி.எம்.ஏ.
- அஇஅதிமுக
- முன்னாள்
- சுசாகம்
- வாசன்
- நத்தம்
- ஜி. வாசன்
- கவரயப்பட்டி
- திண்டுக்கல் மாவட்டம்
- அய்யாட்மக்-
- பி.ஜே.பி கூட்டணி
- AIADMK கூட்டணி
- தின மலர்
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கவரயபட்டியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மக்கள் எதிர்பார்த்தது தான் அதிமுக – பாஜ கூட்டணி. எங்கள் கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலுக்கு எங்களை தயார்படுத்தி கொண்டிருக்கிறோம்.
ஒத்த கருத்தோடு எங்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும்’’ என்றார். இதை தொடர்ந்து செய்தியாளர்கள், வாசனிடம், ‘எத்தனை சீட் கூட்டணியில் கேட்க உள்ளீர்கள்’ என கேள்வி எழுப்பினர். அப்போது அவரது அருகிலிருந்த முன்னாள் எம்பி சித்தன், 10 விரல்களை காண்பித்தார். உடனே சுதாரித்துக் கொண்ட வாசன், சித்தனிடம், நீங்கள் 10 என்று கை காட்டியதை 100 என்று போட்டு விடுவார்கள் என கூற, அங்கிருந்தவர்களிடம் சிரிப்பலை எழுந்தது.
The post அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 10 சீட்? வாசன் முன்னிலையில் மாஜி எம்.பி சூசகம் appeared first on Dinakaran.
