×

ஓபிஎஸ் அரசியலை விட்டே விலக வேண்டும் அமித்ஷா சாதாரணமானவரல்ல அதிமுகவை முடித்து விடுவார்: பெங்களூரு புகழேந்தி பரபரப்பு பேட்டி

சேலம்: அதிமுக-பாஜ கூட்டணி வேலைக்கு ஆகாது. அமித்ஷா சாதாரணமானவரல்ல, அதிமுகவை முடித்து விடுவார் என பெங்களூரு புகழேந்தி கூறினார். சேலத்தில் நேற்று பெங்களூரு புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக ஆட்சியில் பெரும் ஊழல் நடந்தது என, ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பேசினார். இப்போது கூட்டணி வைத்ததும், நல்ல ஆட்சியாக மாறி விட்டதா?. அதிமுகவை எடப்பாடி பழனிசாமி, பாஜவிடம் அடமானம், ஏன் விற்றே விட்டார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா சாதாரணமானவரல்ல. அவர் அதிமுகவை முடித்து விடுவார். இதற்கு முன் மகாராஷ்டிராவில் ஷிண்டேவை வைத்து சிவசேனாவை முடித்து விட்டார். அவர் இல்லையென்றால், தற்போது 3வது முறையாக மோடி பிரதமராக இருக்க முடியாது.  நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. அமித்ஷா வேறு மாதிரியானவர். அவர் 1000 பழனிசாமி என்றாலும் தூக்கி சாப்பிட்டு விடுவார். தேர்தல் வரும்போது 100 சீட்டை எடுத்துக்கொண்டு, மற்றதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என அமித்ஷா கூறி விடுவார்.

அதனால், வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் டெபாசிட் இழப்பார்கள். ஓபிஎஸ்.,க்கு மானம், மரியாதை இருந்தால் அரசியலை விட்டே விலக வேண்டும். அவர் பாஜவுடன் இணைந்து தேர்தலில் நின்றபோதே நான் ஒதுங்கிக்கொண்டேன். தெரியாமல் அவருடன் சேர்ந்து, அவரது தலைமையை கோரி விட்டேன்.

சசிகலா, நான் கட்சியை ஒன்றிணைக்கிறேன் என சொல்லிக்கொண்டே தான் இருப்பார். அதற்குள் 2031ம் வந்து விடும். அவரால் வேலைக்கு ஆகாது. அதனால், அதிமுகவை ஒருங்கிணைக்கும் குழு தோல்வியடைந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி, கடைசி வரை உடன்படவில்லை. அதனால், அந்த குழுவை கலைக்கிறோம். இவ்வாறு பெங்களூரு புகழேந்தி கூறினார்.

The post ஓபிஎஸ் அரசியலை விட்டே விலக வேண்டும் அமித்ஷா சாதாரணமானவரல்ல அதிமுகவை முடித்து விடுவார்: பெங்களூரு புகழேந்தி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : OPS ,Amit Shah ,AIADMK ,Bengaluru ,Pugazhendi ,Salem ,BJP ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...