- முதல்வர்
- எம். யூ கே. ஸ்டாலின்
- பி. பி. மண்டல்
- சென்னை
- நாயகர் பி. பி.
- மண்டல்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
சென்னை: சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நாயகர் பி.பி.மண்டல் என அவரது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைப்பு ரீதியாக வாய்ப்பு மறுக்கப்படுவதை தனது ஆணையத்தின் மூலம் அம்பலப்படுத்தி, சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நாயகர் பி.பி.மண்டலின் நினைவுநாளில் அவருக்கு எம் புகழ் வணக்கம். மண்டல் அவர்கள் கொண்ட பார்வையை இந்த தேசம் உணரும் முன்பே நன்கு உணர்ந்து அவரது நோக்கத்துக்குத் துணையாக உறுதியாக நின்றது திராவிட இயக்கம்.
அவர் முன்னெடுத்த போராட்டம் இன்னும் நிறைவுறவில்லை. துணிவும் நியாயமும் மிக்கஅவரது பல பரிந் துரைகள் இன்னும் நிறைவேற்றப்படமாலே இருக்கின்றன. சமூகநீதிக்கான பயணத்தில் பல தடைகளும் புதிய வடிவங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. மண்டலை போற்றுவது என்பது அவரது கனவை முழுமையாக நிறைவேற்றுவதே அன்றி, அதனை நீர்த்துப்போகச் செய்வது அல்ல. அவர் கனவை நிறைவேற்றும் போராட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு சமூகநீதியை உயர்த்தி பிடித்த நாயகர் பி.பி.மண்டல் appeared first on Dinakaran.
