×

அமலாக்கத்துறையின் நடவடிக்கையை சோனியா, ராகுல் நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து காட்டுவார்கள்: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை யங் இந்தியா நிறுவனம் வாங்கியது ஒரு சாதாரண வர்த்தக நடவடிக்கைதான். இதில் நம்பிக்கை மோசடிக்கோ, குற்றச்சதிக்கோ அல்லது யாரையும் ஏமாற்றியிருப்பதற்கோ இடமில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை மூலம் கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான 661 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கைப்பற்றி, கபளீகரம் செய்வதற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

2016ம் ஆண்டில் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் ஆஜராவதற்கு சோனியா காந்திக்கும், தலைவர் ராகுல்காந்திக்கும் உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது. கடந்த 2019 ஏப்ரல் 5ம் தேதி உச்சநீதிமன்றம் அசோசியேட் ஜர்னல் நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது. அதேபோல டெல்லி உயர்நீதிமன்றம் நேஷனல் ஹெரால்டு வழக்கை நடத்துவதற்கு தடை விதித்து அடுத்த விசாரணை 28 ஜூலை 2025க்கு ஒத்தி வைத்திருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை சொத்துகளை கைப்பற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பாஜவின் அப்பட்டமான பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி பெற்ற நேரு பாரம்பரிய தலைமையில் வந்த சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் ஒன்றிய பா.ஜ. அரசின் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்துக் காட்டுவார்கள்.

The post அமலாக்கத்துறையின் நடவடிக்கையை சோனியா, ராகுல் நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து காட்டுவார்கள்: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Sonia ,Rahul ,Enforcement Directorate ,Selvapperunthakai ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,National Herald ,Young India ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...