×

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை

நாகர்கோவில்: கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை ஒன்றிய பொதுத்துறை நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை வருகிற 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஆய்வு காலத்தில் (5 நாட்களுக்கு) கண்ணாடி பாலத்தில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்க படமாட்டார்கள். எனவே கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

The post கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Glass Bridge ,Nagercoil ,Kanyakumari Ayyan Thiruvalluvar ,Swami Vivekananda Memorial Hall ,Union Public Sector Undertaking ,Anna University ,
× RELATED என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா...