×

அதிமுக – பாஜக கூட்டணி 4 மாதங்கள் வரைக்கு கூட நிலைக்குமா, நீடிக்குமா என தெரியாது: வைகோ பேட்டி

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி 4 மாதங்கள் வரைக்கு கூட நிலைக்குமா, நீடிக்குமா என தெரியாது என சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். அதில், செங்கோட்டையன் டெல்லி சென்று வந்ததும், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும். திடீரென எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்; பின்னர் அமித்ஷா சென்னை வந்ததும் பாஜகவுடன் கூட்டணி.

பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அமித் ஷாவின் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. செங்கோட்டையன் டெல்லி சென்று வந்ததும், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும். பாஜகவுக்கு எடுபிடி போல இருந்து கூட்டணி அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது.

The post அதிமுக – பாஜக கூட்டணி 4 மாதங்கள் வரைக்கு கூட நிலைக்குமா, நீடிக்குமா என தெரியாது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Vaiko ,Chennai ,General ,Egmore, Chennai ,Sengottaiyan ,Delhi ,Edappadi… ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...