- காட்டிமேடு அரசு பள்ளி
- திருத்துறைப்பூண்டி
- கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி
- திருவாரூர்
- தலைமை ஆசிரியர்
- பாலு
- சமத்துவ நாள்
- தின மலர்
திருத்துறைப்பூண்டி, ஏப். 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு தலைமையில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் எடுத்துக் கொண்ட சமத்துவ நாள் உறுதிமொழியில்,சாதி வேறுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து ஏழை எளிய மக்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய, மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் பார்க்க மாட்டேன் என்றும் மற்றவர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் மாணவி பவித்ரா உறுதி மொழியை வாசிக்க உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசிரியர்கள் மாலதி, ரகு, வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
The post கட்டிமேடு அரசுப் பள்ளியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.