- அத்தியூர்
- குன்னம்
- குன்னம் தாலுக்கா, பெரம்பலூர் மாவட்டம்
- குன்னம் தாலுக்கா
- கழனிவாசல்
- அகரம்சீகூர்
- தின மலர்
குன்னம், ஏப்.12: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அத்தியூர் அருகே திடீர் மழை காரணமாக மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னம் வட்டம், அத்தியூர், கழனிவாசல். அகரம்சீகூர் பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் அகரம்சீகூர் – பெரம்பலூர் செல்லும் ரோட்டில் அத்தியூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வேரோடு ரோட்டின் குறுக்கே மரம் சாய்ந்தது. அப்போது சாலையில் எந்த வாகனமும் செல்லாததால் விபத்து எதுவும் நிகழவில்லை. இதை யடுத்து அப்பகுதி மக்கள் ரோட்டில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் இந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post அத்தியூரில் திடீர் மழை ரோட்டில் வேரோடு சாய்ந்த மரம் appeared first on Dinakaran.
