×

சிங்கம்புணரி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

சிங்கம்புணரி, ஏப். 12: சிங்கம்புணரி அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காகோட்டை கிராமத்தில் சடையாண்டி கோயில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்தக் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை கிராம மக்கள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கோயில் உண்டியல் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாத நிலையில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடர்புடைய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிங்கம்புணரி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Sadaiyandi ,Kringakottai ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி