×

கீழ்வேளூர் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு

கீழ்வேளூர், ஏப். 12: நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் நவனீதிஸ்வரர் கோயிலில் சிங்காரவேலவருக்கு பங்குனி உத்திர வழிபாடு நடைபெற்றது. முருகன் சூரனை வதம் செய்ய தனது தாயாரான சிக்கல் வேல்நெடுங்கண்ணி (பார்வதியிடம்) வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாகவும், வேல்நெடுங்கண்ணிடம் முருகன் வேல் வாங்கும் போது முருகனின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பியதாகவும் புராணங்கள் கூறப்பட்டள்ளது. அந்த அற்புதக் காட்சி ஆண்டுதோறும் சூரசம்கார விழாவின்போது சிக்கலில் நடைபெறும். இந்த கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று சிங்காரவேலவருக்கு, (முருகன்) பால் மற்றும் தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிங்கார வேலருக்கு (முருகன்) அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர வழிபாடு நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், சிவாச்சாரியார்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் பால்குட காவடி எடுத்து வந்தனர். இதையடுத்து காலை முதல் சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அதைத் தொடர்ந்து மலர் அலங்காரத்தில் வள்ளி தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

The post கீழ்வேளூர் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Panguni Uttara ,Murugan ,Kilvellur ,Singaravelavar ,Sikal Navaneethiswarar temple ,Nagapattinam ,Sikal Velnedunganni ,Parvathi ,Suran ,Tiruchendur ,Velnedunganni ,Murugan… ,Panguni ,Uttara ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா