×

சின்னகவுண்டாபுரம் அருகே சோகம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

அயோத்தியாப்பட்டணம் : சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த சின்னகவுண்டாபுரம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(35), கொத்தனார். இவரது மனைவி சந்தியா(28). இவர்களது மகன்கள் தர்ஷன்(8), விஷால்(7).

இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முறையே 3, 2ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள சந்தனபுடையார் ஏரியில், நண்பர்களுடன் மீன்பிடிப்பதற்காக, நேற்று மதியம் 3 மணியளவில் சென்றனர். அப்போது, ஏரியில் உள்ள பள்ளத்தில் விஷால் தவறி விழுந்தான். அவனை காப்பாற்ற முயன்ற தர்ஷனும் பள்ளத்தில் விழுந்தான்.

இருவரும் தண்ணீரில் மூழ்கியதால், பதற்றமடைந்த உடன் சென்ற சிறுவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, ஏரியில் மூழ்கிய இருவரையும் தேடினர். பின்னர், மாலை 6 மணியளவில் இருவரையும் சடலமாக மீட்டனர்.

மகன்கள் சடலமாக மீட்கப்பட்டதை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த காரிப்பட்டி போலீசார், அப்பகுதிக்கு சென்று, சிறுவர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சின்னகவுண்டாபுரம் அருகே சோகம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Sogam Lake ,Chinnagoundapuram ,Ayodhyapatnam ,Rajendran ,Ottapatti, Chinnagoundapuram ,Salem district ,Sandhya ,Darshan ,Vishal ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...