குலசேகரம்,ஏப்.11: குலசேகரம் பேரூராட்சியில் 30 தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 15 பேர் பெண்கள். இந்த பெண் தூய்மை பணியாளர்களுக்கு பணி இடைவேளை நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கும், அமர்ந்து இருந்து உணவு உண்பதற்கும் சரியான இட வசதி இல்லாமல் இருந்தது. இந்த குறையை போக்க பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 15 வது நிதிக் குழு மானியத்தில் ரூ.9 லட்சம் செலவில் ஓய்வறை மற்றும் கழிவறை அமைக்கப்பட்டு உள்ளது.
இதனை பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் திறந்து வைத்தார். இதில் துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், கவுன்சிலர்கள் சிவகுமார், சுபாஷ் கென்னடி, எட்பின்ராஜ், மேரி ஸ்டெல்லா, ரெத்தினபாய், லதாபாய், ஏஞ்சலின் ஜெனி, அமல்ராஜ், சந்தோஷ், ரெபிக்கா, ராகிலா பீவி மற்றும் தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
The post லசேகரம் பேரூராட்சி அலுவலகத்தில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை appeared first on Dinakaran.
