×

ஏழுதேசப்பற்று அரசு தொடக்கப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

 

நித்திரவிளை, ஏப்.11: ஏழுதேசப்பற்று அரசு தொடக்கப் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை டெல்பின் மேரி தலைமை தாங்கி மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் எழுத்தாளர் குமரித்தோழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பத்மதேவன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுஜிமோள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தனியார் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறும் இத்தகைய பட்டமளிப்பு விழா, அரசுப் பள்ளியிலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஏழுதேசப்பற்று அரசு தொடக்கப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Ezhudeshapattu Government Primary School ,Nithiravilai ,headmistress ,Delphine Mary ,Kumaritholan ,graduation ,Ezhudeshapattu Government ,Primary ,School ,
× RELATED கொலைக் குற்றவாளி குண்டாசில் கைது