சென்னை: அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு 14ம் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அம்பேத்கர் 135வது பிறந்த நாளான வருகிற 14ம் தேதி (திங்கள்) காலை 10 மணியளவில் அதிமுக சார்பில் சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா அருகே அமைந்துள்ள அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
அதேபோல் சென்னை, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு, தலைமை கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த இரண்டு நிகழ்ச்சியிலும், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு 14ம் தேதி சேலத்தில் எடப்பாடி மரியாதை செலுத்துகிறார் appeared first on Dinakaran.
