×

சீர்திருத்த ஆண்டாக அறிவித்து பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

குன்னூர் : இந்த ஆண்டு சீர்திருத்த ஆண்டாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் 80வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 478 பயிற்சி அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

எல்லைப்பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழல், மறைமுக போர் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாக்கின்ற வகையில் இங்கு பெற்ற பயிற்சி உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். இது மட்டுமின்றி தேசிய அளவில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளால் எதிர்வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்கின்ற வகையில் செயல்பட தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத்துறையில் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்கின்ற வகையில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சீர்திருத்த ஆண்டாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். முன்னதாக, குன்னூர் வெலிங்டன் போர் நினைவு தூணில், போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

The post சீர்திருத்த ஆண்டாக அறிவித்து பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rajnath Singh ,Coonoor ,ceremony ,Wellington Tri-Service Officers Training College ,Coonoor, Nilgiris district ,Dinakaran ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்