×

சபரிமலையில் தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து ஐயப்பனின் உருவம் பொறித்த தங்க லாக்கெட்டுகள் விற்பனை: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

திருவனந்தபுரம்: சபரிமலையில் தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து ஐயப்பனின் உருவம் பொறித்த பூஜிக்கப்பட்ட தங்க லாக்கெட்டுகள் விற்பனை தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 கிராம், 4 கிராம் மற்றும் 8 கிராம் எடையுள்ள ஐயப்பனின் உருவம் பொறித்த பூஜிக்கப்பட்ட தங்க லாக்கெட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக தமிழ் புத்தாண்டு தினமான வரும் 14ம் தேதி முதல் தங்க லாக்கெட்டுகள் விற்பனை தொடங்க உள்ளது.

இதற்கான விலை விவரம் வருமாறு: 2 கிராம்- ரூ.19,300, 4 கிராம்- ரூ.38,600, 8 கிராம்- ரூ.77,200. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் தங்க லாக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம். தங்க நாணயங்களுக்கான விற்பனை பின்னர் தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

The post சபரிமலையில் தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து ஐயப்பனின் உருவம் பொறித்த தங்க லாக்கெட்டுகள் விற்பனை: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Lord Ayyappa ,Sabarimala ,Tamil New Year ,Thiruvananthapuram ,Tamil ,New Year ,Sabarimala Ayyappa ,
× RELATED ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த...