கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் 25,753 ஆசிரியர்களின் பணியில் சேர்க்கப்பட்டதை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கடந்த 3ம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் வேலையை இழந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள கஸ்பாவில் மாவட்ட ஆய்வாளர் அலுவலகத்தில் சக ஆசிரியர்களுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பணி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்கள் தொடங்கி உள்ளனர். இந்த விவகாரத்துக்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
The post 25,753 பேர் வேலை நீக்கம் எதிரொலி மே.வங்கத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.
