- கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி
- சென்னை
- சட்டப்பேரவை
- மக்கள் நலத்துறை அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம்
- தின மலர்
சென்னை: கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதை செயல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் அந்த அறக்கட்டளை செயல்படும்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணை:
கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த உதவியாக இருக்கும். குறிப்பாக ஆராய்ச்சிக்கு, மருத்துவ திட்டங்களுக்கு, உடல் நலம் சார்ந்த பிரச்னை குறித்த ஆராய்ச்சிக்கு என பல்வேறு விதமான ஆராய்ச்சிக்கு நேரடியாக இந்த அறக்கட்டளை நிதி வழங்கும். கொள்கை உருவாக்க உதவியாக இருக்கும். உயர் தர ஆய்வுக்கு மருத்துவ உபரணங்கள், நிதி உள்ளிட்ட அனைத்தும் வழங்க முடியும். மேலும் பல்வேறு குழு இணைந்து ஒரே ஆராய்ச்சி மேற்கொள்ள அறக்கட்டளை உதவியாக இருக்கும்.
மாநில மருத்துவக் கல்வி இயக்குநர் அதற்கு தலைவராகவும், இணை இயக்குநர் துணைத் தலைவராகவும் செயல்படுவர். மாநிலத்தில் மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும், மேம்படுத்தும் பணிகளிலும் அந்த அறக்கட்டளை ஈடுபடும். அதேபோன்று, ஆராய்ச்சி திட்டங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரி அதனை மதிப்பீடு செய்யும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post மருத்துவ ஆராய்ச்சிகளை மேம்படுத்த கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
