×

போதைப்பொருள் கடத்தலில் 10 பேரில் 5 பேர் பயன்படுத்துகின்றனர்; கிரிண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை கமிஷனர் அருண் கடிதம்

சென்னை: போதை பொருள் விற்பனைக்கு அதிகளவு பயன்படுத்தும் கிரிண்டர் ஆப் பயன்படுத்துவதால், அந்த ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதை பொருள் வழக்கில் கைது ெசய்யப்பட்ட 10 பேரில் 5 பேர் கிரிண்டர் ஆப் மூலம் தான் மெத்தப்பெட்டமின் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வருவது விசாரணையில் உறுதியாகி உள்ளது. நைஜீரியர்களும் இந்த ஆப் மூலம் தான் சென்னையில் போதை பொருள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த ஆப் மூலம் போதை பொருள் விற்பனை செய்யும் நபர்கள், வெளிநாடு, மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து தங்களுக்கு தேவையான போதை பொருள் விற்பனை, கொள்முதல் தொடர்பான தகவல்களை பரிமாரிக்கொள்கின்றனர். இதனால் போலீசாரிடம் சிக்காமல் போதை பொருள் தடையின்றி விற்பனை செய்து வருகின்றனர். சென்னையில் போதை பொருள் விற்பனைக்கு கிரிண்டர் ஆப் முக்கிய பங்கு வகித்து வருகிறது விசாரணை மூலம் உறுதியாகி உள்ளது. எனவே கிரிண்டர் ஆப்பை தடை செய்தால் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும்.

இதையடுத்து ெசன்னை போலீஸ் கமிஷனர் அருண், போதை பொருள் விற்பனைக்கு செல்போன் மூலம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘கிரிண்டர்’ ஆப்பை தடை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுத்தியுள்ளதாக உயர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, விரையில் கிரிண்டர் ஆப் தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post போதைப்பொருள் கடத்தலில் 10 பேரில் 5 பேர் பயன்படுத்துகின்றனர்; கிரிண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை கமிஷனர் அருண் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai Commissioner ,Arun ,Tamil Nadu government ,Chennai ,Police Commissioner ,Chennai… ,Chennai Commissioner Arun ,Dinakaran ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்