×

உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை வந்தது: 116 டன் அதிநவீன மின்னணு சாதனங்களுடன் கொரியா சென்றது

சென்னை: தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 116 டன் அதிநவீன மின்னணு சாதனங்கள் உலகின் மிகப்பெரிய அமெரிக்க நாட்டு சரக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் நேஷ்னல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் மிகப்பெரிய விமானமான கோ நேஷனல் ஏர், ஜெம்போ போயிங் 747-400 சரக்கு விமானம், நேற்று முன்தினம் (புதன்கிழமை) சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. இந்த சரக்கு விமானம், உலகில் உள்ள விமானங்களில் மிகப்பெரிய விமானம் ஆகும்.

இந்நிலையில் இந்த மிகப்பெரிய ரக சரக்கு விமானம், இங்கிலாந்து நாட்டின் பெர்மிங்ஹாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நேற்று முன்தினம் காலை சென்னை பழைய விமான நிலைய சரக்கக பகுதி ஓடு பாதைக்கு வந்து நின்றது. இந்த பெரிய ரக விமானம், நிற்பதற்கு கூடுதல் இடவசதிகள் தேவைப்பட்டதால், மூன்று விமானங்கள் நிற்பதற்கான இடம் இந்த ஒரு விமானத்திற்கு ஒதுக்கப்பட்டது.

அதன்பின்பு தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அதிநவீன மின்னணு சாதனங்கள், தென்கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக சென்னை விமான நிலைய சரக்கக பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அந்த சரக்குகள், இந்த மிகப்பெரிய சரக்கு விமானத்தில் ஏற்றும் பணியில் சென்னை விமான நிலைய சரக்கக பகுதி பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை வரை இப்பணிகள் நடந்தன.

பின்பு நேற்று முன்தினம் இரவு, மிகப் பெரிய சரக்கு விமானமான கோ நேஷனல் ஏர் ஜெம்போ போயிங் விமானம், சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தென் கொரிய நாட்டிலுள்ள இன்சியான் விமான நிலையத்திற்கு 116 டன் நவீன மின்னணு சாதனங்களுடன் புறப்பட்டு சென்றது. உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்று, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகி உள்ள அதிநவீன மின்னணு சாதனங்களை ஏற்றுமதிகளுக்காக, தென் கொரிய நாட்டிற்கு ஏற்றிச்சென்ற சம்பவம் சென்னை விமான நிலைய கார்கோ பகுதி அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை வந்தது: 116 டன் அதிநவீன மின்னணு சாதனங்களுடன் கொரியா சென்றது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Korea ,Tamil Nadu ,South Korea ,US ,United States ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...