சென்னை: சென்னையில் இருந்து 189 பேருடன் மும்பைக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 4.55 மணிக்கு 189 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானபோது, அதில் இயந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பின்பு விமானம் காலை 6.30 மணிக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
The post இயந்திர கோளாறு தாமதமாக புறப்பட்ட மும்பை விமானம் appeared first on Dinakaran.
