×

தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி மறைவு

சென்னை: தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி (91). இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் நாகசாமி. இவரின் பணிகளை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் 2018ம் ஆண்டு பத்ம பூஷன் விருதை ஒன்றிய அரசு வழங்கி கவுரவித்தது. மாநில அரசிடமிருந்தும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 1959ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியில் இருந்தார். 1963 முதல் 1966 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், 1966 முதல் 1988ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனராகவும் இருந்தார். இந்தநிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் நேற்று காலை உயிரிழந்தார். நாகசாமியின் மறைவுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். …

The post தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி மறைவு appeared first on Dinakaran.

Tags : Nagasami ,Chennai ,Government of Tamil Nadu ,Nakasami ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...