- Icourt
- கிரிஸ்துவர்
- ஜான் ஜெபராஜ் முன்ஜம்
- சென்னை
- பாக்சோ
- சென்னை உயர் நீதிமன்றம்
- கோவாய் ஜி. என் ஜான் ஜெபராஜ்
- மில்ஸ்
- ஜான் ஜெபராஜ்
- கோவில்
- காந்திபுரம் குரோஸ்காட் ரோட்

சென்னை: போக்சோ வழக்கில் தலைமறைவான கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது37). . ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சபையின் மத போதகராக இருந்தார். ஜான் ஜெபராஜ் பாப் இசையின் மூலம் பாடல்களை பாடி இளைஞர்களை கவர்ந்து வந்தார்.
இவர் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநி லங்ளுக்கும் சென்று பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார். இந்த நிலையில், கோவையில் உள்ள வீட்டில் கடந்த ஆண்டு நடந்த விருந்து நிகழ்ச்சியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி அவரது வீட்டில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளும் பங்கேற்றுள்னர்.
அப்போது, ஜான் ஜெபராஜ் அந்த சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. மதபோதகர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து போதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவரை கைது செய்வதற்காக ஜி.என்.மில்சில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் இல்லை.போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். ஜான் ஜெபராஜ் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக நேற்று லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், போக்சோ வழக்கில் தலைமறைவான கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் அளித்துள்ள மனுவில், எனது மனைவி குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் உள்நோக்கத்துடன் என் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. போதகர் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
The post கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்..!! appeared first on Dinakaran.
